நடிப்புக்கு முழுக்கு போடும் ஸ்வீட் நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அந்த இளம் நடிகை. பிரபல ஸ்வீட் கடையின் பெயரை வைத்திருக்கும் அந்த நடிகை விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில் திடீரென தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடிய அந்த நடிகை தனக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதால் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என ரசிகர்களிடம் கூறினார். மேலும் ஒரு சில படங்களிலும் ஒப்பந்தமானார். இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் ஸ்வீட் நடிகை நடிப்புக்கு முழுக்கு போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதையை கேட்காமலே தவிர்த்து வருகிறாராம். திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என கூறிய நடிகை தற்போது புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தற்போது இதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது அந்த நடிகை கர்ப்பமாக உள்ளாராம். அதன் காரணமாகவே புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் அவர் கதை கேட்பதில்லையாம். மேலும் குழந்தை பிறந்த பிறகும் அவர் சினிமாவில் நடிப்பது சந்தேகம் தான் என கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.

நடிகையின் இந்த திடீர் முடிவு காரணமாக அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மேலும் நடிகை தமிழ் சினிமாவின் டாப் நடிகர் ஒருவர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில், நடிப்புக்கு முழுக்கு போட உள்ளதாக வெளியான செய்தியால் அந்த படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.