குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சென்று விபத்துக்களை ஏற்படுத்துவது என்பது தற்போது அதிகமாகிக்கொண்டே வருகிறது. பிரபல நடிகர், நடிகைகளே இவ்வாறு செய்வது டிரெண்ட் ஆகி விட்டது போல. பல பிரபல நடிகர், நடிகைகள் குடிபோதையில் வாகனம் ஓடிச் சென்று விபத்துகளை ஏற்படுத்தியுள்ளனர். அவ்வாறு செய்த நடிகர், நடிகைகளின் பட்டியலில் தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் இடம்பிடித்துவிட்டார்.

கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி அன்று இரவு காரில் தனது தோழி பவானியுடனும் மற்றும் 2 நண்பர்களுடனும் சென்று கொண்டிருந்த நடிகை யாஷிகாவுக்கு திடீரென்று எதிர்பாராத விபத்து நடைபெற்றது. அந்த விபத்தில் நடிகை யாஷிகாவின் தோழி பவானி இறந்துவிட்டனர். அதன்பின் நடிகை யாஷிகா, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

அப்போது யாஷிகா, தனது தோழி பவானி இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் பவானி இல்லை என்பது என் உடலில் உயிர் இல்லாதது போல் இருக்கிறது என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு நிலையிலும், யாஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கடமையை செய்’ என்னும் தான் நடித்து வெளிவரவிருக்கும் படத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். யாஷிகாவின் பலவருட கஷ்டத்தின் பலனாகவே தனக்கு ‘கடமையை செய்’ என்னும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறுகிறார்.

அந்த திரைப்படத்தில் S.J.சூர்யா, மொட்டராஜேந்திரன், ராஜசிம்மன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஒரு பக்கம் வாழ்க்கை உணர்ச்சி அற்றதாகவும், கஷ்டமாகவும் மறுபுறம், வாழ்க்கை சென்று கொண்டிருப்பதாகவும் கவலையுடன் தெரிவித்தார்.

ஆனால் யாஷிகாவின் ரசிகர்கள் ‘கவலைப்படாதீர்கள், இதுவும் கடந்து போகும், நடந்ததை மாற்ற முடியாது, தங்களின் மறு வரவேற்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ என்று யாஷிகாவிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.