தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று அழைக்கப்பட்ட கார்த்திக் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ரொமான்டிக் படங்களில் அவர் அதிகமாக நடித்துள்ளார். மௌன ராகம், உள்ளத்தை அள்ளித்தா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

பல திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்த இவரது சில பழக்கத்தின் காரணமாக நடிப்பதற்கான ஆர்வத்தையும் இழந்தார். இதன் காரணமாக இவர் ஒத்துக் கொண்ட திரைப்படங்களை சரியாக முடித்து கொடுக்காமல்  இருந்து வந்ததாக பல பிரச்சனைகள் வந்தது.

சங்கிலி முருகன் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் இவர்கள் இருவருக்கு மட்டுமே படங்களை ஒழுங்காக முடித்துக் கொடுத்தார். இவர்கள் இருவருமே கார்த்திக்கு நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘நான் சரியாக நடிக்காவிட்டால் இத்தனை படங்களில் எப்படி நடித்து இருப்பேன். எனக்கு டிமிக்கி கொடுப்பவர்களுக்கு நான் டிமிக்கி கொடுத்து விடுவேன், என்னை தொந்தரவு பண்றவங்களுக்கு மட்டும்தான் நான் குடைச்சலாக தெரிவேன் என்று ஒரு காரணத்தையும் கூறினார்.