நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜீ தமிழ் சர்வைவர் பிரபலம்.. நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு!

90களில் தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருந்த முன்னணி நடிகர் தான் ஆக்சன் கிங் அர்ஜுன். தற்போது அர்ஜுனுடன் நடித்த நடிகை, ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்’ என்ற குற்றச்சாட்டை அர்ஜுன் மீது சுமத்தி உள்ளார். பொதுவாகவே ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இடையில் ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெறும். அவ்வாறான காட்சிகளில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பது போல் நடிப்பார்கள்.

அதேபோல்  2017 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம்தான் நிபுணன். இதில் அர்ஜுனுக்கு ஜோடியாக மனைவி கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹரிஹரன் நடித்திருப்பார். இந்த திரைப்படத்திலும் இடம் பெறக்கூடிய ரொமான்ஸ் காட்சியினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தற்போது அர்ஜூனின் மீது ஸ்ருதி பாலியல் புகார் அளித்துள்ளார். மேலும் தன்னுடைய ஃபேஸ்புக் பேஜில் வெளியிட்ட பதிவில், தமிழ் திரைப்படமான நிபுணன் என்ற திரைப்படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்த போது, நடிகர் அர்ஜூன் நடிகை ஸ்ருதி ஹரிஹரனிடம் நெருங்கி நடிக்க வேண்டிய காட்சி ஒன்று இருந்ததாகவும்,

அந்த காட்சியை படம் ஆக்குவதற்கு முன்பாக திரை குழுவின் முன்பாக  நடிகர் அர்ஜுன் தன்னிடம் நெருங்கி வந்து, அவரை தொட்டதாகவும், அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அது தனக்கு கோபம் வரும் வகையில் இருந்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதற்காகத்தான் தான் நடிகர் அர்ஜூனின் மீது பாலியல் புகார் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். அதை மறுத்த நடிகர் அர்ஜுன் மேலும், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மானநஷ்ட வழக்கு கொடுத்துள்ளார். நடிகர் அர்ஜுனின் உறவினரும், கன்னட நடிகருமான துருவா சார்ஜா பெங்களூர் சிவில் நீதிமன்றத்தில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது ரூபாய் 5 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனிடையே, கன்னட திரைப்பட சங்கம் நடிகர் அர்ஜுனுக்கும் மற்றும் நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கும் நடந்த பிரச்சனையை கலந்துரையாட ஏற்பாடு செய்தனர். இந்த பிரச்சனை தொடர்பாக போலீசாரிடம் இருந்து இந்த நிபுணன் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் படக்குழுவினரை விசாரணைக்கு அழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத அர்ஜுன் தற்போது இது போன்ற தவறான விஷயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார் அல்லது உண்மையா என்பதை காவல்துறை விசாரித்து தான் சொல்ல வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.