நடிகர்களின் மறு பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய ராதாரவி.. உண்மையைப் பேசும் ஒரே வில்லன்

தமிழ் சினிமாவில் ராதா ரவி பல படங்கள் நடித்துள்ளார். இவர் காமெடி, வில்லன் போன்ற பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஒரு காலத்தில் ராதாரவி நடிக்காத படங்கள் இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ராதாரவி படத்தில் வெளிப்படையாக பேசுவதை போல தான் நிஜ வாழ்க்கையில் தனக்கு தோன்றிய விஷயங்களை யாருக்கும் பயப்படாமல் வெளிப்படையாக பேசிவிடுவார். அதனால் வரும் விளைவுகளையும், பிரச்சினைகளையும் கூட கண்டுகொள்ள மாட்டார். அந்த அளவிற்கு தனக்கென தனி பாணியை வைத்துள்ளார்.

அதனாலேயே பல இயக்குனர்களும் ராதாரவியிடம் பேசுவதற்கு தயங்குவார்கள் ஏனென்றால் இவர்கள் கூறும் விஷயங்களை கூட அவர் வெளிப்படையாக தெரிவித்து விடுவார். சமீபத்தில் ராதாரவி நடிகர்கள் யாரையும் நம்பாதீர்கள் என கூறியுள்ளார்.

மேலும் நடிகர்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டோம். ஒரு சில நேரத்தில் ரசிகர்களிடம் நல்லவர்களாக பேசுவதும். அக்கறையாக நடந்து கொள்வது போல பேசுவார்கள் ஆனால் படம் வெளியான பிறகு அதற்கு அப்படியே எதிர்மறையாக மாறி விடுவார்கள் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும் நடிகர்கள் அனைவரும் இதைத்தான் செய்து வருகிறார்கள். ஆரம்பத்தில் ஒன்று பேசுவது வளர்ந்த பிறகு ஒன்று பேசுவது என மாறி மாறி பேசுவார்கள். இதனால் ரசிகர்கள் யாரும் நடிகர்களை நம்பாதீர்கள் என கூறியுள்ளார். மேலும் தனக்கு தோன்றியதை வெளிப்படையாக தெரிவித்து விடுவேன், அதனை யார் எப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்கு பரவாயில்லை என வெளிப்படையாக ராதாரவி கூறியுள்ளார்.