நடன போட்டியில் தோல்வி.. ஆனா அதே நடுவருடன் ஜோடி போட போகும் சாய் பல்லவி

சாய்பல்லவி தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனால் தெலுங்கு சினிமாவில் தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

சாய்பல்லவி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று 2வது பரிசை தட்டிச் சென்றார். அப்போது சாய் பல்லவி மிகவும் மனவருத்தத்தில் இருந்துள்ளார் காரணம் நம்மை விட அழகிலும் திறமையிலும் குறைவாக இருந்தும் சக போட்டியாளர் எப்படி வெற்றி பெற்றார் என பலரிடம் கேள்வி கேட்டு வந்துள்ளார்.

ஆனால் அப்போது அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக பிரபுதேவா இருந்தார். இருப்பினும் சாய் பல்லவி அந்த நடன நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது பெருமையாக இருப்பதாக கூறி விட்டு சென்றார். பல வருடங்களுக்கு பிறகு அதே பிரபுதேவாவின் கோரியோகிராபி ரவுடி பேபி பாடலில் நடனமாடி இருப்பார். இதனை பார்க்கும் போது உண்மையான திறமைசாலி எப்போதுமே வெற்றி பெறுவார். அப்படித்தான் சாய்பல்லவியின் தற்போது வெற்றி பெற்றுள்ளார் என கூறி வருகின்றனர்.

மேலும் அந்த நடன நிகழ்ச்சியில் சாய்பல்லவி முதல் பரிசு பெற்றால் கூட சில லட்சங்கள் தான் சம்பாதித்து இருப்பார். ஆனால் இப்போது பல கோடி சம்பளம் வாங்கக்கூடிய நடிகையாக உயர்ந்துள்ளார். சாய் பல்லவி கூடிய விரைவில் பிரபுதேவாவிற்கு கூட ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளது எனக் கூறி வருகின்றனர்.