நச்சுன்னு முத்தம் கொடுத்த ஆலியா மானசாவின் புகைப்படம்.. அடுத்த டைவர்ஸ்க்கு தயாராகும் விஜய் டிவி ஜோடி

வெள்ளித்திரையில் இருக்கும் கதாநாயகிகளுக்கு ரசிகர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதே அளவிற்கு சின்னத்திரை கதாநாயகிகளுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை ஆலியா மானசா.

இவர் தன்னுடன் நடித்த சஞ்சய் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு இருவருக்கும் தற்போது அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த சில நாட்கள் மட்டுமே இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் ஆலியா மானசா ராஜா ராணி இரண்டாம் பாகம் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சீரியல் ஹிந்தியில் வெளியான ‘என் கணவன் என் தோழன்’ என்ற நாடகத்தின் தமிழாக்கம் ஆகும். இதில் ஆலியா மானசா கதாநாயகியாக சந்தியா என்ற கதாபாத்திரத்திலும், கதாநாயகனாக சித்து என்ற சீரியல் நடிகர் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இவர்களுக்கு இடையே தற்போது ரொமான்ஸ் காட்சி தூக்கலாக காண்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ராஜா ராணி2 சீரியலில் ஆலியா மானசா சித்துவிற்கு முத்தம் கொடுத்திருக்கும் காட்சி இடம்பெற்றது. இதைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான கமெண்டுகளை தட்டு விடுகின்றனர்.

பொதுவாக ரொமான்ஸ் காட்சி என்றாலே முகம் சுளிக்கும் சிலருக்கு ஆலியா மானசா நடித்திருக்கும் இந்த முத்தக்காட்சி ஆனது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ‘நடிப்பு என்கின்ற பெயரில் இப்படி எல்லாம் பண்றதா, சித்து குடுத்து வச்சவ’ என்றும், ‘ஆலியா கூடிய சீக்கிரம் டைவர்ஸ் எல்லாம் வாழ்த்துக்கள்’ என்றும் ரசிகர்கள்  கமெண்ட் அடிக்கின்றனர்.

மேலும் ராஜா ராணி 2 சீரியலில் இப்படி ரோமன்ஸ் சீன்களை காண்பித்தால் எப்படி குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியும் என்றும் சிலர் தங்களது கமெண்ட்களின் மூலம் கோபத்தை தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற கமெண்டுகளை பார்த்தாவது இனி இயக்குனர் சொல்வதைக் கேட்காமல் சற்று அடக்க ஒடுக்கமாக நடித்தால் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும். இந்த காட்சியை அவரது கணவருடன், குடும்பத்துடன் பார்க்க முடியுமா என்பதுதான் சமூக வளையத் தளத்தில் ரசிகர்கள் எழுப்பும் முக்கியமான கேள்வி.