தோல்வி பயத்தால் ரூட்டை மாற்றிய விஜய் சேதுபதி.. இந்த பிளான் ஆவது ஒர்க் அவுட் ஆகுமா.?

தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று ஒரு பிரபல நடிகராக தன் திறமையின் மூலம் முன்னேறி இருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும்.

இவர் பெரிய ஹீரோ என்றால் எந்த பந்தாவும் இல்லாமல், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல், கெஸ்ட் ரோல், வில்லன் போன்ற அனைத்து கேரக்ட்ர்களிலும் நடிப்பார். தற்போது இவர் நடிப்பில் கடைசி விவசாயி என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதை தொடர்ந்து அவரின் நடிப்பில் மாதம் ஒரு திரைப்படம் வெளியாகும் அளவுக்கு ஏகப்பட்ட படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார். கடைசி விவசாயி பிப்ரவரி மாதம் வெளியாவதை தொடர்ந்து அதற்கு அடுத்த மாதம் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

அதைத் தொடர்ந்து பல நாட்களாக இழுபறியில் இருந்த இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படம், அதற்கு அடுத்து ஒரு ஹிந்தி திரைப்படம் என்று வரிசையாக திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படமும் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.

அதன் பின்னர் பிசாசு 2, யாதும் ஊரே யாவரும் கேளிர், விக்ரம் உள்ளிட்ட பல படங்கள் அவரின் நடிப்பில் வெளியாக இருக்கிறது. மேலும் அவர் ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவை அனைத்தும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

இதனால் இந்த வருடம் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர் என்ற இடத்தை விஜய் சேதுபதி பிடித்து விடுவார் என்று தெரிகிறது. இந்த வருடம் மட்டுமல்லாமல் இதற்கு முந்தைய வருடங்களில் கூட விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் அதிகமாக வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.