தோல்வி பட இயக்குனரை கைப்பிடித்து தூக்கிவிடும் விக்ரம்.. முதல் முறையாக இணையும் சியான் 62

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மகான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் விக்ரம் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் விக்ரம் முதல்முறையாக கைகோர்த்துள்ளார்.

துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் விக்ரம் கையில் உள்ள நிலையில் தற்போது சியான் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சியான்62 திரைப்படத்தை கஜினி , சர்கார், தர்பார் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.ஆர் முருகதாஸ் இயக்க இருக்கிறார் .

நடிகர் விக்ரம் நடித்த பத்து என்றதுக்குள்ள திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்த நிலையில் தற்போது முதன்முறையாக விக்ரமை வைத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கயிருக்கிறார். விக்ரமின் மகான் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருந்த நிலையில் அனிருத்தின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அந்த படத்திற்கு இசையமைத்தார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் சியான் 62 படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். ஏற்கனவே 2013ஆம் ஆண்டு விக்ரம், ஜீவா நடிப்பில் ரிலீஸான டேவிட் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். தற்போது 9 ஆண்டுகள் கழித்து சியான் 62 படத்தில் அனிரூத் இசையமைக்க உள்ளார்.

விக்ரம், அனிரூத், ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாக உள்ள படத்தை முதல் முறையாக பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் ஏஆர்.முருகதாஸ் இந்த பட வாய்ப்பை இருக்கமாக பிடித்துக் கொண்டால் சினிமாவில் அடுத்த நிலைக்கு சென்று விடலாம். ஏஆர் முருகதாஸின் கம் பேக் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.