தோல்வியை சரிகட்டும் விஜய் சேதுபதி.. அடுத்தடுத்து வெளிவர உள்ள 4 பிரமாண்ட படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதியை பிடிக்காத நபர்களே இல்லை என்றுதான் இருந்தது. அந்த அளவிற்கு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் இவர் நடிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆரம்ப காலங்களில் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த விஜய் சேதுபதி சமீப காலமாகவே படங்களின் எண்ணிக்கையை மட்டுமே பார்க்கிறாரோ என்று தோன்றுகிறது.

மிகவும் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். அந்த அளவிற்கு ஒரே சமயத்தில் ஏராளமான படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். வாரா வாரம் அவரது படம் வெளியாகிவிடும். படங்கள் போதாது என தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இதனால் எங்கு பார்த்தாலும் அவர் முகமே தெரிகிறது.

இப்படி சிறிதுகூட ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பிசியாக நடித்து வருவதாலோ என்னவோ கேட்கும் கதைகளுக்கெல்லாம் ஒகே சொல்லி விடுகிறார். இதன் விளைவாக சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மூன்று படங்கள் வரிசையாக படு தோல்வியை சந்தித்துள்ளது. அந்த வரிசையில் அவர் நடிப்பில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய மூன்று படங்களுமே தோல்வியை தழுவியது.

இதனால் விஜய் சேதுபதி மீது ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்கள் தற்போது விஜய் சேதுபதியை ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் இனியாவது கதைகளை தேர்வு செய்து நடிங்கள் என ரசிகர்கள் கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

ரசிகர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த விஜய் சேதுபதி இனிமேல் படங்களை தேர்வு செய்து மட்டுமே நடிக்க உள்ளாராம். அது மட்டுமின்றி தற்போது தொடர் தோல்வி படங்களை வழங்கியதை சரிகட்டும் விதமாக அடுத்தடுத்து நான்கு வெயிட்டான படங்களை களமிறக்க உள்ளார்.

அந்த வரிசையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விக்ரம், விடுதலை, மாமனிதன், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இப்படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னட பைங்கிளியை கரம் பிடிக்கும் ராஜா ராணி சீரியல் பிரபலம்.. வைரலாகும் திருமண சடங்கு வீடியோ!

நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்து வந்த சின்னத்திரை பிரபலங்கள் சிலர், தொடர்ந்து சில நாட்களாகவே திருமணபந்தத்தில் இணைந்து வருகின்றனர். அந்த விதமாக இப்பொழுது பல வருடங்களாக காதலர்களாக இருந்து வந்த சித்து மற்றும் ஸ்ரேயா ...