தோல்வியால் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட நிலை.. உண்மையை உளறிய பிரபல இயக்குனர்

சிவகார்த்திகேயன் சினிமாவில் அடிமட்டத்திலிருந்து ஜெயித்து வந்தவர் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் சின்ன, சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் அதன்பின் சிறு சிறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவாக வளர்ந்துள்ளார்.

சினிமாவில் ஏற்றத்தாழ்வு எல்லாருக்கும் இருக்கும். ஆனால் சிவகார்த்திகேயன் சினிமாவில் பட்ட அடி ஏராளம் . சினிமாவில் இவர் வளர்ந்து விடக்கூடாது என நண்பர்கள் பலர் சூழ்ச்சி செய்தனர். அதையும் தாண்டி இன்று ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.

சமீபத்தில் கூட “டாக்டர்” பட பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்டார் சிவகார்த்திகேயன். அந்தப் பிரச்சனையை சமாளித்து அவர், இவரிடம் வரும் தயாரிப்பாளர்கள் சொந்தப்படம் எடுக்கிறார்களா, இல்லை வேறு ஒரு இடத்தில் இருந்து காசு வட்டிக்கு வாங்கி எடுக்கிறார்களா என்றுதான் முதலில் கேட்டு வைத்துக்கொள்கிறார்.

இப்பொழுது இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்பை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த அவர், இது ஒரு சின்ன பட்ஜெட் படம். படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஒர்க் அதிகமாக இருக்கும்.

அயலான் படத்தை சிவகார்த்திகேயன் ஹிட் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். சிவகார்த்திகேயன் எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப கவனமாக செய்து வருகிறார். பட யூனிட்டில் உள்ள அனைவரையும் தாங்கிப்பிடிக்கும் ஒரே ஆள் சிவகார்த்திகேயன்.

அது மட்டுமின்றி தோல்வியில் நிறைய யோசிக்கிறாராம் சிவா. எந்த பிரச்சினை வந்தாலும் எளிதாக சமாளிக்கிறாராம். இதையெல்லாம் அவர் சினிமாவில் கற்றுக் கொண்ட பாடம் என்று கூறுகிறார் ராம்குமார்.