தோர் கெட் அப்பில் மிர்ச்சி சிவா- வெளியானது இடியட் புதிய போஸ்டர்

ரேடியோ ஜாக்கி டு சினிமா என்ட்ரி கொடுத்தவர் சிவா. வெங்கட் பிரபு கேங்கில் முக்கிய நபர். சென்னை 29 , சரோஜா என கலக்கினார். பின்னர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப்படம்’ வாயிலாக ‘மிர்ச்சி’ சிவா சோலோ ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அகில உலக சூப்பர் ஸ்டாராக தமிழக மக்களுக்கு காட்சியளித்தார். ரசிகர்களிடத்தில் இப்படத்திற்கு வரவேற்பு கடைத்து முற்றிலும் புதிய பாணியில் தனது நடிப்பை தொடர்கிறார்.

லொள்ளு சபா வாயிலாக ரீச் ஆனவர் அதன் இயக்குனர் ராம் பாலா. 2016 ஆம் ஆண்டு ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகம், வெளியானது. இரண்டுமே ஹிட் தான். மீண்டும் தனக்கு ஹிட் கொடுத்த ஹாரர் காமெடி ஜானரை நம்பி சிவா மற்றும் நிக்கி கல்ராணி இருவரையும் ஹீரோ – ஹீரோயின் ஆகியுள்ளார் இடியட் படத்தில்.

ஸ்க்ரீன் ஸீன் என்டர்டைனமன்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவு ராஜா பட்டாச்சார்யா, இசை விக்ரம் செல்வா, எடிட்டிங் மாதவன். இப்படத்தில் ஊர்வசி, மயில்சாமி, சிங்கமுத்து, ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. நம் அகில உலக சூப்பர் ஸ்டார் மின்னல் மின்ன தோர் கெட்டப்பில் உள்ளார்.

இந்த போட்டோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்பட்ட பிரபலம்.. 500 கோடி, பேரம் பேசிய சம்பவம்

அஜித்குமாருக்கு அரசியல் சுத்தமா புடிக்கவே புடிக்காது, இதனை பலமுறை அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய கருத்தை மற்றவர்களிடம் திணிப்பது தனக்கு விருப்பமில்லை எனவும், சூசகமாக பல மேடைகளிலும் தெரிவித்துள்ளார். இவ்வளவு ஏன் திமுக ...