தொந்தியும் தொப்பையுமாக இருந்த பிக்பாஸ் தர்ஷன்.. உடல் எடையை குறைத்து வெளியான புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தர்ஷன். இந்த நிகழ்ச்சியில் தர்ஷன் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தனர் ஆனால் அவர் பாதியிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான தர்ஷன் பல வருடங்களுக்கு பிறகுதற்போது கூகுள் கூட்டணி எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிக்பாஸ் உடன் இணைந்து பணியாற்றிய லாஸ்லியா இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இப்படத்தின் மூலம் இவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறி வந்தனர். அது மட்டும் இல்லாமல் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வருவதாகவும் தெரிவித்தனர்.

தர்ஷன் தற்போது முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் ஒரு சில கதைகளில் மட்டும் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து வருவதாகவும் விரைவில் இப்படத்தில் நடிப்பார் எனவும் கூறி வந்தனர்.

தர்ஷன் எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். மேலும் உடற்பயிற்சி செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவர். தற்போது தர்ஷன் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் 8 கிலோ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது தட்சனுக்கு பலரும் இவ்வளவு குண்டா இருந்த நீங்கள் இப்படி மாறி விட்டீர்களே எனக் கூறி வருகின்றனர்.

கொல மாஸாக வெளியான பீஸ்ட் பட போஸ்டர்.. ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி விட ...