தொடர்ந்து 5 சக்சஸ் படம்.. மார்க்கெட் போய்விடுமோ என்ற பயத்தில் பூஜா ஹெக்டே எடுத்த முடிவு

2010ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த பூஜா ஹெக்டே, அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா பூஜா ஹெக்டேவை கண்டுகொள்ளாததால், மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்கத் துவங்கி, தொடர்ந்து 5 சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார்.

எனவே தெலுங்கில் நயன்தாரா அளவிற்கு உச்ச நடிகையாக மாறிய பூஜா ஹெக்டே, மீண்டும் தமிழில் 10 வருடங்கள் கழித்து தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவர்  தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடித்து, இந்திய அளவில் கதாநாயகர்கள் தேடும் நடிகையாக மாறியுள்ளார்.

இருப்பினும் பூஜா ஹெக்டே நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் பல படங்கள் தொடர்ந்து தோல்வியைத் சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாகார்ஜுனன் இரண்டாவது மகன் அகில் உடன் பூஜா ஹெக்டே நடித்த ‘மோஸ்ட் எழுஜிபில் பேச்சுலர்(Most Eligible Bachelor)’  என்ற திரைப்படமும், அதைத்தொடர்ந்து பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்த ‘ராதே ஷ்யாம்’ திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது.

அதன் பிறகு கடந்த மாதம் தளபதி விஜய் உடன் பீஸ்ட் படமும், கடந்த வாரம் ராம் சரண்-பூஜா ஹெக்டே நடிப்பில் ரிலீஸான ஆச்சாரியார் திரைப்படமும் தோல்விப் படமாகவே அமைந்தது. இவ்வாறு தொடர்ந்து பெரிய பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தோல்விப் படங்களை கொடுப்பதால் ராசியில்லாத நடிகை என்ற எண்ணம் யாருக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தன்னுடைய சம்பளத்தையும் குறைக்க தயாராகிவிட்டார்.

எனவே தன்னுடைய மார்க்கெட்டை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது பூஜா ஹெக்டே பாலிவுட்டில் சல்மான்கானுடன் நடிக்க கிளம்பியுள்ளார். அதுவும் இந்தப் படம் தல அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கும் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். அதேபோன்று த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்திலும், மற்றுமொரு படத்தில் பவன் கல்யாணுடன் ஹரி ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்தாலும் அடுத்தடுத்து பெரிய பெரிய நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பை மட்டும் பூஜா ஹெக்டே தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள தன்னுடைய சம்பளத்தை பொருட்டாக நினைக்காமல் அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார்.