விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது கடந்த நான்கு சீசன்களையும் வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது ஐந்தாவது சீசனை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி ரசிகர்களிடையே நாளுக்கு நாள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த வகையில் அனுதினமும் இரவு 10 மணிக்கு துவங்கி ஒரு மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியை காண்பதற்கு என்றே ரசிகர்கள் தினமும் காத்துக் கிடக்கின்றன. இந்நிலையில் வருகின்ற வியாழக்கிழமை அன்று தீபாவளி ஸ்பெஷல் நிகழ்ச்சியாக நான்கு மணி நேரம் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

எனவே வரும் வியாழக்கிழமை நவம்பர் 4ஆம் தேதி அன்று இரவு 7 மணிக்கு துவங்கி 11 மணி வரை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்தத் தகவல் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அத்துடன் இதையறிந்த பிக்பாஸ் ரசிகர்களும் தீபாவளியன்று விஜய் டிவியில் நிகழ்ச்சியை காண்பதற்கு ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

இதுமட்டுமின்றி விஜய் டிவி புது புது விதமான நிகழ்ச்சிகளை தீபாவளி ஸ்பெஷல் சிறப்பு நிகழ்ச்சியாக அன்று முழுவதும் ஒளிபரப்பி ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளது.

ஆகையால் தீபாவளிக்கு வீட்டில் புத்தாடை போட்டு சரவெடியுடன் விஜய் டிவியின் என்டர்டைன்மென்ட் ஷோக்களை கண்டுகளிக்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.