தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் எஸ் ஜே சூர்யா.. இவ்வளவு வெறுப்புக்கு காரணம் இவர்தான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் டான் திரைப்படத்தின் பிரமோஷன் விழா ஏகபோகமாக நடந்து வருகிறது. இதனையொட்டி சமீபத்தில் நடந்த டான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்புள்ளிகள் கலந்து கொண்டனர்.

வெகு விமரிசையாக நடைபெற்ற அந்த விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் நிறைய காமெடி பண்ணி அசத்தினார். சிவகார்த்திகேயனை பற்றி சொல்லவே வேண்டாம் அவரும் தன் பங்கிற்கு பேசி சிறப்பாக செயல்பட்டார்.

இப்படி ஒருபுறம் புரமோஷன் பணிகள் களைகட்டி வந்தாலும் மற்றொருபுறம் எஸ் ஜே சூர்யாவை படக்குழுவினர் ஒதுக்குவதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா இந்த படத்திலும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

இதனால் அவருடைய நடிப்பை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் பிரமோஷன் தொடர்பான போஸ்டரில் எஸ் ஜே சூர்யாவின் படம் எங்கும் இடம் பெறவில்லை. மேலும் சத்யம் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பேனரில் கூட எஸ் ஜே சூர்யாவின் போட்டோவை போட்டதற்காக சிவகார்த்திகேயன் கோவப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது.

அதனால்தான் தற்போது எஸ் ஜே சூர்யா புறக்கணிக்கப்படுவதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்த பிரமோஷன் விழாவில் என்ட்ரி டிக்கெட்டில் கூட எஸ் ஜே சூர்யாவின் படம் இடம்பெறவில்லையாம். இதனால் அவருக்கு தயாரிப்பு நிறுவனத்துடன் சம்பள விஷயத்தில் ஏதும் தகராறா அல்லது சிவகார்த்திகேயனுடன் ஏதும் பிரச்சனையா என்று பேசப்பட்டு வருகிறது.

ஆனால் எஸ் ஜே சூர்யா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சிவகார்த்திகேயனை பற்றி மிகவும் உயர்வாக, புகழ்ந்து பேசி இருந்தார். அதனால் அவர்கள் இருவருக்கும் பிரச்னை வர வாய்ப்பு இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் ஒரு நாள் குட்டு வெளிப்பட்டு தான் ஆக வேண்டும்.