தேவைக்கு பழகுறவ தான நீ.. கீர்த்தி சுரேஷ் வெளுக்கும் ரஜினி ரசிகர்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் ரஜினிக்கு தங்கை வேடத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் வெளியான டிரெய்லரில் கூட இருவரது காட்சிகள்தான் கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு மகளாக நடிக்க வேண்டிய கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடிப்பது இப்போதுவரை ரஜினி ரசிகர்களைத் தவிர வேறு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் கமர்சியல் ரீதியாக இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

இது ஒருபுறமிருக்க திடீரென ரஜினி ரசிகர்கள் கீர்த்தி சுரேசை கண்டபடி திட்ட ஆரம்பித்தனர். இதனால் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தில் உள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்படி நான் என்ன பண்ணிட்டேன் இப்படி பண்றீங்க என புலம்புகிறாராம்.

அதற்கு ரசிகர்களும் காரணத்தைக் கூறி விட்டனர். ரஜினியுடன் நடித்த கீர்த்திசுரேஷ் சமீபத்தில் ரஜினி விருது வாங்கியதற்கு ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை என்பது ரசிகர்களின் வேதனையாக உள்ளது. ரஜினி விருது வாங்கியதை இந்திய சினிமாவே கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருக்கையில் கீர்த்தி சுரேஷ் மட்டும் எப்படி வாழ்த்து சொல்லாமல் இருக்கலாம் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தனுஷுடன் சேர்ந்து தொடரி என்ற படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அப்படி இருக்கையில் விருது வாங்கியது அனைத்து டிவி சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது. அப்படி கூடவா அவர்கள் விருது வாங்கியது உங்களுக்கு தெரியாது என கீர்த்தி சுரேஷுக்கு கண்டபடி மெசேஜ் அனுப்பி வருகின்றனர்.