தேவர் மகன் பார்ட் 2-வை கையில் எடுக்கும் ஆண்டவர்.. கமல், நாசர் மகனாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

திரையுலகில் ஆல்ரவுண்டராக நம்மை என்றுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நம் தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித்தந்த ஒரு சிறந்த கலைஞன். இவரின் நடிப்பில் எத்தனையோ படங்கள் நம்மை கவர்ந்தாலும் நம்மால் மறக்க முடியாத ஒரு திரைப்படமாக இருப்பது தேவர் மகன்.

கமல் தன்னுடைய சொந்த தயாரிப்பில் கதை எழுதி நடித்த திரைப்படம் இது. சிவாஜி கணேசன், நாசர், கௌதமி, ரேவதி, வடிவேலு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தனர். படத்தின் முதல் பாதியில் தாடி மீசையுடன் நகரத்து இளைஞராக இருக்கும் கமல் இரண்டாம் பாதியில் முறுக்கு மீசையில் பக்கா கிராமத்தானாக மாறி விடுவார்.

இப்படி படத்தில் இடம்பெற்ற வசனங்கள் முதல் காட்சிகள் வரை ஒவ்வொன்றும் மக்களை வெகுவாக ரசிக்க வைத்தது. இப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற போகிறது. ஆனாலும் இந்தப் படத்தின் மீதான தாக்கம் மக்களுக்கு என்றும் குறைந்ததில்லை.

அப்படி நாம் ரசித்த இந்த தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் தற்போது தயார் செய்ய இருக்கிறார். ஏற்கனவே இதன் முதல் பாகத்தில் கமல், நாசரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வது போல் முடிவு பெற்றிருக்கும். தற்போது இதன் இரண்டாம் பாகம் கமல் மற்றும் நாசர் இருவரின் மகன்கள் இணைந்து நடிப்பது போல் தயாராக இருக்கிறதாம்.

அதில் கமல் மகனாக நடிகர் விக்ரமும், நாசர் மகன் கேரக்டரில் விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி பல செய்திகள் வெளிவந்தாலும் இன்னும் கமல் தரப்பிலிருந்து கதாநாயகர்கள் யார் என்பதை முடிவு செய்யவில்லை.

மேலும் இந்த கதையை எப்படி உருவாக்குவது என்று கமல் தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே தேவர்மகன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். மேலும் பல பிரபலங்களும் இதன் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு தயாராக இருந்தனர்.

இந்நிலையில் தேவர்மகன் படம் குறித்து வெளிவரும் செய்திகளால் கமலின் ரசிகர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் அந்த கதாபாத்திரங்களுக்கு விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் ரொம்ப பொருத்தமாக இருப்பார்கள் என்பது அவர்களின் கருத்து.