தேவசேனாவிற்கா இந்த நிலைமை? உடல் எடையை குறைத்து வெளிவந்த வைரல் புகைப்படம்

பொதுவாகவே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஹீரோ, ஹீரோயின் இருவருமே தங்களின் உடல் எடையை குறைப்பதும், ஏற்றிக்கொள்வதும் தற்பொழுது ஃபேசனாக உள்ளது. சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி,

ஆர்யா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்து அதன்பிறகு குறைப்பதற்கு படாதபாடுபட்டு கொண்டிருக்கிறார்.இதற்கிடையில் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் தனது உடல் எடையை குறைத்து விட்டு தான் புது படத்தில் கமிட் ஆக வேண்டும் என்ற ஒரே முடிவில் அனுஷ்கா இருந்துள்ளார்.

இந்நிலையில் நிதர்சனம் படத்திற்கு பிறகு அனுஷ்கா தற்போது தெலுங்கில் யு.வி கிரியேஷன் தயாரிப்பின் உருவாகவிருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். தற்போது 40 வயதை நெருங்கும் அனுஷ்கா தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் அருந்ததி படத்தில் நடித்த கதாநாயகியாக மாற முயற்சிக்கிறார்.

இருப்பினும் இவருக்குக் கிடைத்துள்ள புதிய படத்தில் முதிர்ந்த பெண்ணுக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்படும் காதலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கப்பட உள்ளது.

மேலும் இந்த படத்தின் கதாநாயகனாக நவீன் போலிசெட்டி நடிக்க இருந்த நிலையில் அவர் படத்திலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, தற்போது இந்த படத்திற்கு கதாநாயகன் யார் என்ற தேடலில் படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அருந்ததி, பாகுபலி 2 போன்ற படங்களில் நடித்து கலக்கிய அனுஷ்காவிற்கா இந்த நிலைமை? என அவருடைய ரசிகர்கள் மனம் வருந்துகின்றனர்.

இந்த வார விஜய் டிவியின் டிஆர்பி லிஸ்ட்.. பாரதிகண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய 2 சீரியல்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்பொழுதுமே டாப் ரேட்டிங்கில் இருக்கும். அதிலும் இந்த தொலைக்காட்சியின் டிஆர்பியை உயர்த்தும் சீரியல் என்று ஒரு சில சீரியல் உள்ளது. அந்த வகையில் இந்த வார முதல் ஐந்து ...