தற்போது பல இளம் இயக்குனர்கள் சிவகார்த்திகேயனை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர். சிவகார்த்திகேயன் டான் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்குள் அடுத்தடுத்த படங்கள் நடிப்பதற்கான கதைகளை கேட்டு வருகிறார்.

தற்போது நடிகர் சதீஷ்குமாரால் சிவகார்த்திகேயனுக்கு சினிமா வட்டாரத்தில் பிரச்சனை வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் யாரையும் விட்டுக்கொடுக்காமல் எல்லோருமே வேண்டும் என நினைக்க கூடியவர். சமீபத்தில் சதீஷ்குமார் நாய் சேகர் படத்தில் நடிப்பதற்கான அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். ஆனால் இந்தத் தலைப்பில் வடிவேலுவும் ஒரு படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் படத்தின் தலைப்பை தர மறுத்துள்ளது.

அதனால் சதீஷ்குமார் படத்தின் தலைப்பினை சிவகார்த்திகேயனை வைத்து திடீரென அறிவித்தார். அதில் சிவகார்த்திகேயன், நாய் சேகர் தலைப்பை பதிவிட்டு வடிவேல் சாரின் ரசிகனாக படத்தின் தலைப்பில் வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சி. இனிமேல் தான் உங்களுக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு சினிமா வட்டத்தில் இருப்பவர்கள் பலரும் சிவகார்த்திகேயன் பலே கில்லாடி தான் எனக் கூறி வருகின்றனர். அதாவது சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் வடிவேலு நடிக்க உள்ளார். அதனால் சிவகார்த்திகேயன் வடிவேலுவையும் விட்டுக்கொடுக்காமல், சதீஷ்யையும் விட்டுக்கொடுக்காமல் நாசுக்காக வடிவேலு ரசிகனாகவும் சதீஷ்க்கு ஆதரவாக பதிவு செய்தார்.

இதனை பார்த்து பலரும் சிவகார்த்திகேயன் விவரமாகதான் எல்லா செயலும் செய்து வருகிறார் என கூறி வருகின்றனர். ஆனால் நாய் சேகர் போஸ்டரை வெளியிட்டதால் வடிவேலு சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. மேலும் வடிவேலு ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு சாபத்தை வழங்கி வருகின்றனர்.

தற்போது இளம் இயக்குனர் ஒருவர் சிவகார்த்திகேயனிடம் கதை ஒன்று கூற அது அவருக்கும் பிடித்துப்போக இந்த கதையில் நானே நடிக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் எந்த காமெடியன் போடலாம் என கேட்டு வந்தனர். முன்பெல்லாம் சிவகார்த்திகேயன் சதீஷ்குமார் மற்றும் சூரி இவர்களில் யாராவது ஒருவரை போடலாம் என கூறுவார்.

ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் இவர்களைவிட வடிவேலுதான் எந்த காலத்துக்கும் பேசக்கூடிய காமெடியாக இருக்கும் என்பதால் அவரை போடுங்கள் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் வடிவேலுவையும் விட்டுக்கொடுக்காமல் சதீஷ்யையும் விட்டுக்கொடுக்காமல் சிவகார்த்திகேயன் செய்யும் இந்த அரசியல்தான் சினிமாவிற்கும் நல்லது.