தேசிய விருது வில்லனுடன் மோதும் அஜித்.. தல 62 படத்தின் மிரட்டலான அப்டேட்

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் பட வெளியீட்டிற்காக அவருடைய ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் அஜித்தின் புதிய படத்தைப் பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

வலிமை படத்திற்குப் பிறகு வினோத் இயக்கத்தில் தல 61 திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கும் தகவல் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தல 62 படத்தைப் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அஜித் தற்போது பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த நிலையில் ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி தல 62 திரைப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் மங்காத்தா, வேதாளம் போன்ற திரைப்படங்களில் நெகட்டிவ் கலந்த கேரக்டரில் நடித்து இருந்தார். அதன் பிறகு அவர் இந்த மாதிரியான கதைகளில் நடிக்க வில்லை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தல 62 படத்தில் அஜித் நெகட்டிவ் கலந்த ரோலில் நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் நிலவி வருகிறது .

இதன் காரணமாக தல 62 படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அடுத்த 100 நாட்கள் உன்னை நேரில் சந்திக்காம.. வெங்கட்பிரபு போட்ட ட்விட், உறுதியானது பிக்பாஸ் சீசன்5 போட்டியாளர்!

விஜய் டிவியின் அக்டோபர் 3ஆம் தேதியானா இன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் துவங்க உள்ளது. இந்த சீசனில் கலந்துகொள்ள உள்ள 16 போட்டியாளர்களை பற்றி எதுவும் அறிவிக்காமல் விஜய் ...