தெலுங்கில் செட்டிலாக போகும் தனுஷ்.. சிவப்புக் கம்பளதுடன் வரவேற்கும் தயாரிப்பாளர்கள்.!

தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தலைவர் ரஜினி காந்தின் மருமகனும் ஆவார். மேலும் இயக்குனர் பாடகர் பாடலாசரியர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற பல்வேறு படங்களை தனது ரோலுக்காக தில்லாக எடுத்து அதிலும் தூள் கிளப்பியிருக்கிறார். தமிழில் ஏற்கனே பல்வேறு கமிட்மெண்ட்களில் பிசியான செட்யூலில் இருக்கும் தனுஷை தெலுங்கு சினிமாவோ சிவப்பு கம்பள வரவேற்பு தருகிறது.

ஏற்கனவே தமிழில் இருந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த 3 படத்தின் வாயிலாக இந்தி திரையுலகம் வரை திரும்பிப்பார்க்க வைத்ததும் மேலும் இந்தியில் சோனம் கபூருடன் ரஞ்சனா எங்கிற படமும் நடித்ததும் பழைய கதையாகிப்போனது.

ஊரடங்கில் வெளியான கர்ணனும் ஜகமே தந்திரமும் பலதரப்பட்ட பாராட்டுக்களை வாரிக்குவித்த அதே தருணத்தில் திருச்சிற்றம்பலம் மற்றும் மாறன் படங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன.

தெலுங்கு இயக்குனர் சுரேஷ் கும்மாலாவும் அவர் பங்கிற்கு தனுஷிடம் கேட்க சட்டென சம்மதம் தெரிவித்தாராம் நம்ம தனுஷ் இது ஒரு தெலுங்கு படம் தான். அடுத்ததாய் நிதின் கீர்த்தி சரேஷ் நடிப்பில் ரங்தே படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி ஒரு படத்திற்காக பேசியுள்ளாராம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவலும் கசிய துவங்கியுள்ளது.

மேலும் இன்னொரு தெலுங்கு இயக்குனர் ஒருவர் கதை சொல்லியிருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நடிகர் இல்லாமல் சந்திரமுகி 2 இல்லை.. பேயிக்கே பூச்சாண்டி காட்டபோகும் பிரபலம்

வைகைப்புயல் வடிவேலு தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கருக்குமான பிரச்சினை இப்போது பேசி முடிக்கப்பட்டு விட்டது. அதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு இப்போது இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் 23ஆம் புலகேசி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் செயல்பாடுகள் ...