உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து, தனது நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் வித்யுத் ஜம்வால். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமடைந்த நடிகர் வித்யுத் ஜம்வால். தற்போது, இவர் பேஷன் டிசைனர் நந்திதாவை நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.

தமிழ் திரைப்படத்தில் இவர் தல தளபதியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பில்லா 2’ வில்லனாக அஜித்துடனும், விஜய்யுடன் ‘துப்பாக்கி’ எனும் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி, நடிகர் சூர்யாவின் நண்பனாக ‘அஞ்சான்’ எனும் திரைப்படத்திலும் நடித்து, தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

இவர் கடந்த சில வாரங்களுக்கு  முன்னாள், நந்திதாவுடன் தாஜ்மஹாலுக்கு சென்று வந்த புகைப்படங்களை, நந்திதா தனது இன்ஸ்டா ஐடியில் வெளியிட்டிருந்தார். பிறகு சில மணி நேரத்தில், அவரே அதை நீக்கி விட்டார்.

ஆனால் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து விட்டது மட்டுமல்லாமல் அதிகமாக ஷேர் செய்துள்ளனர் அத்துடன் இதுகுறித்து வித்யுத் இடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, ‘தனக்கு பேஷன் டிசைனர் நந்திதா உடன் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது’ என்று கூறியிருந்தார்.

தற்போது நடிகர் வித்யுத் ஜம்வால் தனது இன்ஸ்டா ஐடியில் தானும் நந்திதாவும் கைகோர்த்துக் கொண்டு (ஸ்போர்ட் க்ளைம்பிங்) செய்வது போல் இருக்கும் புகைப்படத்தையும் மற்றும் வித்யுத் ஜம்வாலும், நந்திதாவும் தாஜ்மஹாலின் முன் கை கோர்த்திருப்பது போன்ற புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை சோசியல் மீடியாக்களின் வழியாக குவித்து வருகின்றனர்.