துக்ளக் தர்பார் படம் எப்படி இருக்கு.? ட்விட்டரில் கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டுமே. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது லாபம் மற்றும் துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதில் லாபம் படம் திரையரங்கிலும் துக்ளக் தர்பார் படம் நேரடியாக தொலைக்காட்சியிலும் வெளியாகி உள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி உள்ளார். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன், கருணாகரன், சம்யுக்தா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி படம் என்றாலே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருக்கும் அதே போல் துக்ளக் தர்பார் படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. தற்போது தொலைக்காட்சியில் வெளியாகி உள்ள துக்ளக் தர்பார் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை ரசிகர்களே ட்விட்டரில் கமெண்ட் மூலம் பதிவு செய்துள்ளனர்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சற்று மாற்றி இருந்தால் படம் சிறப்பாக இருந்திருக்கும் என ரசிகர் ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதேபோல் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஓரளவிற்கு கலவையான விமர்சனங்களையே துக்ளக் தர்பார் படம் பெற்றுள்ளது.

எப்போதும் படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் விஜய் சேதுபதிக்கு துக்ளக் தர்பார் படம் சற்று குறைவு என்பது போல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் சேதுபதி படங்களில் அவரது நடிப்பு தான் மிகப்பெரிய பலமே. அந்த வரிசையில் இப்படம் சற்று தடுமாறி உள்ளது என்று தான் அனைவரும் அவர்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். ஒரு நடிகர் எப்போதுமே அவரது ரசிகர்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆக்ரோஷமாக வெளிவந்த ருத்ர தாண்டவம் ரிலீஸ் போஸ்டர்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த அப்டேட்

இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்தான் திரெளபதி. குறைந்த முதலீட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் அதிக வசூலைப் பெற்றிருந்தது. அதேபோல் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் காரணமாக அதிக ...