திறமை தான் முக்கியம், அழகு இல்ல.. சூப்பர் ஸ்டாரை போல் சாதித்து காட்டிய கருப்பழகி!

முன்பெல்லாம் கருப்பாக இருப்பவர்கள் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்ற ஒரு மாயை இருந்தது. கலராக இருப்பவர்களால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற ஒரு கருத்தும் இருந்தது. அதை எல்லாம் உடைத்து காட்டி சினிமாவில் எட்டாத ஒரு உயரத்தை அடைந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தற்போது அவரைப் போன்றே நடிப்பதற்கு திறமை தான் வேண்டும், அழகு முக்கியம் இல்லை என்று ஒரு நடிகையும் சாதித்து காட்டியிருக்கிறார். வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போன்ற நிறத்துடன் இருக்கும் நடிகைகளுக்கு தான் மார்க்கெட் அதிகமாக இருக்கும்.

ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி பல வெற்றி திரைப்படங்களில் நடித்து திறமையான நடிகை என்று பெயர் எடுத்தவர் தான் சரிதா. 80 காலகட்ட சினிமாவில் தன்னுடைய நடிப்பால் பலரையும் மிரட்டிய இவர் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இவர் தேர்ந்தெடுத்த அத்தனை கதாபாத்திரங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

பாக்யராஜ் முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி போட்ட இவர் தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தண்ணீர் தண்ணீர், வண்டிச்சக்கரம், ஊமை விழிகள் போன்ற பல திரைப்படங்களில் நடிப்பில் நான் யாருக்கும் சளைத்தவர் கிடையாது என்று இவர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அதிலும் முக்கியமாக ரஜினிகாந்துடன் இவர் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ரஜினி அப்பா, மகன் என்ற இரு வேடங்களில் வருவார். அதில் சரிதா மிகவும் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். மேலும் அப்படத்தில் அவர் ரஜினியுடன் போட்டி போட்டுக் கொண்டு நடிப்பில் வெளுத்து வாங்கி இருப்பார்.

இப்படி இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறார். அந்த வகையில் சினிமாவில் நடிப்பதற்கு அழகு ஒரு பொருட்டே கிடையாது. திறமையும், தன்னம்பிக்கையும் தான் முக்கியம் என்று சாதித்து காட்டிய சரிதா பல நடிகைகளுக்கும் ரோல் மாடலாக இருக்கிறார்.

மகான் வெளியீட்டு தேதியை அறிவித்த விக்ரம்.. மொத்தமாக படத்தை வாங்கிய பிரபல OTT நிறுவனம்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் இப்படத்தில் இவரது மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார். படத்தில் வில்லனாக விக்ரமும் கதாநாயகனாக துருவ் விக்ரம் நடிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது. அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ...