திறமையிருந்தும் இதுவரை பாராட்டபடாத ஒரே நடிகர்.. அடிமேல் அடிவாங்கி சினிமாவில் சாதித்தவர்

சினிமா துறையில் பல திறமைகள் இருந்தும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா என்றால் அது சந்தேகம்தான். அந்த வகையில் பல திறமைகள் கைவசம் இருந்தும் இந்த நடிகரை சினிமா துறை கைவிட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆரம்ப காலத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தான் ஒரு சிறந்த இயக்குனர் என்று சினிமா துறைக்கு நிரூபித்தவர் தான் டி ராஜேந்தர். ஒரு இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று இவர் பன்முகத் திறமைகளை கொண்டு சினிமாவில் கலக்கி வந்தார்.

இவரின் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல் சினிமாவில் இவர் ஒரு கண்ணியத்தையும் கடைப்பிடித்து வந்தார். இப்பொழுது சினிமாவில் ஆபாச காட்சிகள் மிகவும் சாதாரணமாக எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் டி ராஜேந்தர் தன்னுடைய படங்களில் அப்படி எந்த ஒரு ஆபாசமும் இல்லாமல் குடும்பங்கள் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு படங்களை இயக்கினார். இதுதான் அவர் மக்கள் மனதில் இடம் பெற்றதற்கு முக்கிய காரணம்.

இவர் பேசும் அந்த அடுக்குமொழி வசனம் இன்றும் சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கிறது. இப்பொழுது கூட இவரின் கைவசம் ஏராளமான கதைகள் இருக்கிறது. ஆனால் இவர் இப்போது சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருக்கிறார். அதற்கு காரணம் சினிமாவில் தற்போது இவருக்கான அந்தஸ்து கிடைக்கவில்லை என்பதுதான்.

சினிமாவை விட்டு சிலகாலம் அரசியலில் ஈடுபட்டு வந்த அவருக்கு அங்கும் சரியான வாய்ப்பு அமையவில்லை. இதனால் அவர் தற்போது அனைத்திலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார். இப்படி சினிமாவில் பல திறமைகளைக் கொண்டு சாதனை படைத்த இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.