திருமண வாழ்க்கையால், திரைவாழ்க்கையில் அடி வாங்கிய 3 பேர்.. பச்சைத் துரோகம் செய்த பிரகாஷ்ராஜ்

ஒருவரது இல்லறம் நன்றாக அமைந்தால் தான் அவரது தொழிலும் நன்றாக அமையும். அவ்வாறு சொந்த வாழ்க்கை நன்றாக இருந்தால்தான் எதிலேயும் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு வெற்றி அடைய முடியும். அவ்வாறு திருமண வாழ்க்கை மிக மோசமாக அமைந்ததால் சினிமாவில் வெற்றி பெற முடியாமல் போன இரண்டு நடிகர்களை பார்க்கலாம்.

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் பிரசாந்த். தொடர் வெற்றியால் குறுகிய காலத்திலேயே அதிக ரசிகர்களை பெற்றிருந்தார். தற்போது முன்னணி நடிகர்களாக உள்ள அஜித், விஜய்க்கு ஒரு காலத்தில் டஃப் கொடுத்தவர் நடிகர் பிரசாந்த்.

இவருடைய திருமண வாழ்க்கை மோசமாக அமைந்ததால் சினிமாவில் இவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது. பிரசாந்த், கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து பிரசாந்தை திருமணம் செய்து கொண்டதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

அதனால் பிரசாந்த் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது மீண்டும் அவரது தந்தை இயக்கத்தில் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பிரசாந்தை தொடர்ந்து சொந்த வாழ்க்கையால் சினிமாவில் சாதிக்க முடியாத நடிகர் பிரபுதேவா.

நடனம், நடிப்பு, இயக்கம் என அனைத்திலும் திறமையானவர் பிரபுதேவா. இவர் நடிகை நயன்தாராவுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் இருந்ததால் சினிமாவில் தன் பெயரை கெடுத்துக் கொண்டார். இதனால் இவருக்கு பட வாய்ப்பும் குறையத் தொடங்கியது.

இந்நிலையில் பிரபுதேவாவின் மனைவி ரமலத் இவரின் பெயரை நாறடித்துவிட்டார். குறிப்பாக பெண்கள் பிரபுதேவா மீது கோவபடும்படி செய்துள்ளார் ரமலத். அதன்பின் பிரபுதேவா தன்னுடைய கடின உழைப்பால் மீண்டும் எழுந்து வந்துள்ளார். தற்போது பிரபுதேவா பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர்களைப் போலவே நடிகர் பிரகாஷ்ராஜும்  காதலித்து திருமணம் செய்த முதல் மனைவி லலிதா குமாரியை,  விவாகரத்து செய்துவிட்டு திரையுலகில் சிறிதுகாலம் நடிக்க வாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்டார். பின்னர் போனி வர்மாவை இரண்டாவது திருமணம் செய்து திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்தார்.