திருமண மண்டபத்தில் பார்வதியின் மாமியார் எடுத்த அதிரடி முடிவு.. ஐபிஎஸ் மூளையை தீட்டும் சந்தியா!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சரவணனின் தங்கை பார்வதியின் திருமணம் இன்று நடைபெற இருப்பதால், அதை எப்படியாவது தடைசெய்ய வேண்டுமென அர்ச்சனா, பார்வதியின் முன்னாள் காதலன் விக்கியை தூண்டிவிட்டு சதித் திட்டம் தீட்டுகிறாள்.

அதற்கேற்றார்போல் விக்கியும், பார்வதி தன்னுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை திருமண மண்டபத்தில் இருக்கும் அனைவரிடமும் தூக்கி வீசி, பார்வதி தவறானவள் என்பதை நிரூபிக்க பார்க்கிறான்.

ஆனால் யாரும் எதிர்பாராத அந்த சமயத்தில், பார்வதியின் மாமியார் விக்கியிடம், ‘நீ எவ்வளவு கேடு கெட்டவன் என சந்தியா என்னிடம் ஏற்கனவே சொல்லி விட்டாள். ஆகையால் பார்வதி தான் என்னுடைய மருமகள்.

இன்னும் எத்தனையோ வீடியோ போட்டோவை எல்லாம் போய் எடுத்துட்டு வா, அப்பொழுதும் இந்த திருமணம் தடைபெறாது’ என பார்வதியின் மாமியார் விக்கிக்கு சரியான சவுக்கடி கொடுத்தார். அவர், பார்வதியின் மீது அவ்வளவு நம்பிக்கையாக பேசியது சரவணன் குடும்பத்தினார் மகிழ்ந்து போனார்.

அதுமட்டுமின்றி சந்தியா, ‘ஆண்-பெண் காதலிப்பது சகஜம் தான். ஆனால் அந்த காதல் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை பொறுத்துதான் காதலுக்கு வெற்றி தோல்வி அமையும்’ என  விக்கியின் மூஞ்சியில் அடித்தார் போல் பக்கம் பக்கமாக சந்தியா டயலாக் பேசினார்.

எனவே விக்கி, இப்படி தான் செய்வார் என்பதை முன்பே தன்னுடைய ஐபிஎஸ் மூளையால் சிந்தித்த சந்தியா, பார்வதியின் திருமணம் தடைபெறாமல் அவளுடைய மாமியாரின் மனதில் எந்த சந்தேகமும் வராத அளவுக்கு சந்தியா சரியாக காய் நகர்த்தி இருக்கிறார்.