சூர்யா, ஜோதிகா ஜோடி கோலிவுட் வட்டாரங்களில் மிகவும் பிரசித்தி. சினிமா துறையில் உள்ள இருவர் திருமணம் செய்ய முடிவு எடுக்கும் பட்சத்தில் தாராளமாக இவர்களை ரோல் மாடலாக பின்பற்றலாம்.

ஜோ வாழ்வில் வந்த பின்பு தான் சூர்யாவின் சினிமா மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது என்பது அனைவருக்கும் தெரியும். திருமணத்திற்கு பின் நடிப்பை விட்டு ஜோ விலகினார்.  குழைந்தைகள் வளர்ந்த பின்பு மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஜோதிகா. வெவ்வேறு ஜானர், கதாபாத்திரம் என கலக்கி வருகிறார்.

அதுமட்டுமன்றி 2 டி நிறுவனத்தின் முக்கிய முடிவுகளிலும் இவரின் பங்கு உண்டாம். சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கினார். இவரின் முதல் பதிவுக்கு சூர்யாவும் கமெண்ட் செய்து வரவேற்றார். இந்த ஜோடிக்கு தேவ் மற்றும் தியா என இரண்டு குழந்தைகள். நேற்று தான் சூர்யா – ஜோவின் 15 ஆம் ஆண்டு திருமண நாள்.

ஜோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யாவின் அஞ்சான் கெட் அப் பென்சில் ஆர்ட் மற்றும் சிங்க ஜோடி உள்ள ஓவியத்தை பதிவிட்டுள்ளார். கமெண்டில் என் சிங்கத்திற்குப் பரிசு எனத் தெரிவித்துள்ளார்.

ஜோதிகாவின் ஓவிய திறனை தான் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.