திருமண தேதியை வெளியிட்ட நயன்தாரா விக்னேஷ் சிவன்.. எங்க வச்சு நடக்கப்போகுது தெரியுமா.?

தற்போது கோலிவுட்டில் நட்சத்திரம் காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக இருவரும் காதலித்து வந்தனர். மேலும் இவர்கள் இருவரும் விடுமுறை நாட்களை வெளிநாடு சென்று கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அங்கு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவும். இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவான காத்துவாக்குல 2 காதல் படம் வெளியானது.

இதனால் பல்வேறு ஊடகங்களுக்கு விக்னேஷ் சிவன் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறியிருந்தார். மேலும் இவர்களுக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் ஆர்வமாக கேள்விகள் கேட்டு வந்திருந்தனர்.

சமீபத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றபோது நயன்தாராவின் நெற்றியில் குங்குமம் இருந்ததால் ஏற்கனவே இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது என்ற புரளியும் கிளம்பி இருந்தது.

ஆனால் இவர்களது திருமணம் இந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் இவர்களது திருமணம் திருப்பதி கோயிலில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளயுள்ளனர். அதன்பிறகு சென்னையில் பிரமாண்டமாக ரிசப்ஷன் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதில் திரைப் பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.