திருமணமே வேண்டாம் என ஓட்டம் பிடிக்கும் நடிகைகள்.. தமன்னா முதல் அனுஷ்கா வரை

பொதுவாக சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளுக்கு மார்க்கெட் கொஞ்சம் குறைந்து விட்டால் அவர்கள் ஒரு தொழிலதிபராக பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். திருமணத்துக்கு பின்னும் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த நடிகைகளும் இருக்கிறார்கள்.

ஆனால் வயசானாலும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சில நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி திருமணம் வேண்டாம் என்று ஓட்டம் பிடித்த சில நடிகைகளைப் பற்றி காண்போம்.

தமன்னா இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வரும் தமன்னா 32 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். வயதாகி விட்டதே என்று அவரிடம் கேட்டால் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று கூலாக பதில் சொல்கிறார்.

லக்ஷ்மி ராய் இவருக்கு 32 வயது தாண்டிவிட்டது ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சினிமாவில் மார்க்கெட் இருந்தால் கூட பரவாயில்லை தற்போது இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது, கவர்ச்சி வேடங்களில் நடிப்பது என்று காலத்தை கடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் வாய்ப்பு தேடி பல கவர்ச்சி போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

ப்ரியா ஆனந்த் 35 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக சுற்றி வருகிறார். ஆரம்பத்தில் தமிழில் அதிக திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் சமீபகாலமாக மலையாள பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளார்.

சதா தமிழில் ஜெயம், அந்நியன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவருக்கு தற்போது 38 வயது ஆகிவிட்டது. இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாமல் மீண்டும் திரைப்படங்களில் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என்று ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஹீரோயின்களில் இவரும் ஒருவர். சீரியல்களில் மிகப் பிரபலமாக இருந்த இவருக்கு சினிமாவில் தற்போது ஏராளமான படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. ஆனால் அந்தப் படங்களில் பாதிக்குமேல் ரிலீசாகாமல் கிடப்பிலேயே கிடக்கிறது. தற்போது 33 வயதாகும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று மும்முரமாக நடித்து வருகிறார்.

த்ரிஷா 38 வயதாகும் இவர் இன்னும் அதே இளமையுடன் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். சில வருடங்களுக்கு முன் இவர் ஒரு தயாரிப்பாளரை காதலித்து நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். பிறகு என்ன நடந்ததோ அந்த திருமணத்தை நிறுத்திவிட்டு தற்போது வரை வேறு திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

அனுஷ்கா செட்டி அருந்ததீ, பாகுபலி போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தற்போது 40 வயது ஆகிவிட்டது. ஆனாலும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏன் என்று கேட்டால் என் மனதிற்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை என்று கூறுகிறார்.