திருமணத்தினால் அரைடஜன் படத்தை இழந்த விஜய் பட நடிகை.. விபரீத முடிவில் தயாரிப்பாளர்கள்

தமிழ், தெலுங்கு என்று பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால் தற்போது சினிமாவில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்துள்ளார். தமிழில் விஜய், அஜித் என்று பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் கடந்த 2010ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் அவர் சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா என்ற சந்தேகம் அவருடைய ரசிகர்களுக்கு இருந்து வந்தது. ஆனாலும் காஜல் அகர்வால் சினிமாவில் தொடர்ந்து நாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ஹே சினாமிகா என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

இதுதவிர தற்போது அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார். ஆனால் அந்த படத்தில் எல்லாம் தற்போது காஜல் நடிக்க முடியாத நிலைமையில் இருக்கிறார். ஏனென்றால் கர்ப்பமாக இருக்கும் அவர் தற்போது தன்னுடைய குழந்தையின் வரவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

இது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவரை தங்கள் படங்களில் புக் செய்த தயாரிப்பாளர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. தற்போது நடிக்க முடியாத நிலையில் இருக்கும் காஜலின் படங்கள் அனைத்தும் பாதியிலேயே நிற்கிறது.

இதனால் படத்தை தொடர முடியாத நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் பலரும் புலம்பி வருகிறார்கள். வேறு வழியில்லாமல் சில தயாரிப்பாளர்கள் காஜல் அகர்வாலை அந்த படங்களில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒரு நடிகையை புக் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.

ஆனால் அவரை வைத்து பல காட்சிகளை எடுத்து விட்ட தயாரிப்பாளர்களும் வேறு ஒரு நடிகையை புக் செய்தால் அதிலும் நஷ்டம் ஏற்படும் என்று கலங்கி வருகின்றனர். மேலும் காஜல் குழந்தை பிறப்புக்கு பிறகு படத்தில் நடிப்பதற்கு எவ்வளவு காலதாமதமாகும் என்று தெரியாததால் தயாரிப்பாளர்கள் பலத்த யோசனையில் இருக்கின்றனர்.