திருமணத்தால் பட வாய்ப்புகளை இழக்கும் விஜய், அஜித் பட நடிகை

முன்பெல்லாம் ஒரு நடிகைக்கு திருமணமாகி விட்டாலே அவரது கெரியர் க்ளோஸ் ஆகிவிடும். அந்த நடிகையா அவருக்கு திருமணமாகி விட்டது அதனால் அவர் வேண்டாம் என தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்கள் ஒதுக்கி விடுவார்கள். அந்த நடிகையின் மார்க்கெட்டும் அப்படியே சரிந்து விடும்.

ஆனால் தற்போது அப்படி அல்ல. திருமணமான பின்னர் தான் நடிகைகளுக்கு வாய்ப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகை சமந்தாவை உதாரணமாக கூறலாம். இவர் திருமணத்திற்கு முன்பை விட திருமணத்திற்கு பின்னர் தான் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

இருப்பினும் இந்த அதிர்ஷ்டம் அனைவருக்கும் அமையாது என்பது தான் உண்மை. சமந்தாவை பார்த்து நாமும் திருமணத்திற்கு பின்னர் டாப் நடிகையாக வலம் வரலாம் என அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டவர் தான் அந்த இளம் நடிகை. ஆனால் தற்போது ஏன் திருமணம் செய்தோம் என புலம்பி வருகிறாராம்.

விஜய் அஜித் என டாப் ஹீரோக்களுடன் டூயட் பாடிய அந்த இளம் நடிகை திடீரென அவர் திருமணத்தை அறிவித்தார். இருப்பினும் திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என கூறி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். ஆனால் சமீபகாலமாகவே நடிகல கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கேற்ப நடிகையும் ஒப்பந்தம படங்களில் இருந்து விலகியதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இல்லாமல் போய்விட்டதாம்.

நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் வதந்தி காரணமாக தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளாராம். அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறார்களாம்.

ஒருவேளை அவர் கர்ப்பமாக இருந்தால் அவரை வைத்து முழு படத்தையும் எடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் அனைத்து தயாரிப்பாளர்களும் நடிகையை அணுக தயங்குகிறார்கள். இதனால் அந்த நடிகை கடும் அப்செட்டில் உள்ளாராம்.

கின்னஸ் சாதனை படைக்கப் போகும் பாக்யா.. முட்டுக்கட்டை போட்ட உத்தம புருஷன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது அதிரடி திருப்பங்களுடன் வரக் காத்திருக்கிறது. அதாவது ராதிகாவுக்காக பாக்யா மீண்டும் சமையல் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார் கோபி. ஆனால் பாக்கியா சமையலை வாங்க யாரும் ...