தியேட்டர்கள் செய்யும் தில்லாலங்கடி வேலை.. களை எடுக்க காத்திருக்கும் சன் பிக்சர்ஸ்

எப்பொழுதுமே பெரிய படங்கள் இரண்டும் மோதிக் கொண்டாலே வரும் பிரச்சனை எந்த படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதுதான். அந்த வகையில் இந்த மாதத்தில் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் செய்யப்பட்ட பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரு படங்களும் திரையரங்கில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

இரண்டு படங்களுமே தற்போது தமிழ்நாட்டில் பெரிய அளவில் மோதிக் கொண்டு வருகிறது. பீஸ்ட் படம் இப்பொழுது எதிர்மறை விமர்சனங்களை பெற்று கொஞ்சம் டல் அடிக்கிறது. அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் புத்திசாலித்தனமாக சில காட்சிகளை கேன்சல் செய்து வருகின்றனர்.

அதாவது ஒரு சில தியேட்டரில் 5 காட்சிகள் இருக்கும் இடத்தில் மூன்று காட்சிகளை கேஜிஎப் 2விற்க்கு, இரண்டு காட்சிகள் பீஸ்ட் படத்திற்கும் ஒதுக்குகின்றனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கேஜிஎப் 2 படத்தை பார்க்க வைக்க ரசிகர்களை மறைமுகமாக தூண்டுகின்றனர்.

இதனால் தற்போது திரையரங்கில் பெரும் அடி வாங்கிக் கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தை விட்டுவிட்டு, லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கேஜிஎப் 2 படத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இதனால் பெரிய அதிருப்தியில் இருக்கிறது சன் பிக்சர்ஸ். எந்தெந்த தியேட்டர்களில் இந்த மாதிரி செயல்படுகிறது என்று களை எடுத்து வருகிறது. இதனால் தியேட்டர்களும் சற்று கலகத்தில் தான் இருக்கிறது.

தற்சமயம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சன் பிக்சர்ஸ், தான் தயாரிக்கும் அடுத்தடுத்த படங்களை வெளியிடும் உரிமையை யாருக்கு கொடுக்க வேண்டும் யாருக்கு கொடுக்க கூடாது என தியேட்டர் உரிமையாளர்களையும் விநியோகஸ்தர்களையும் உன்னிப்பாக கவனித்து அவர்களை சரியான இடத்தில் அடிக்க பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.