வசூலில் பட்டையை கிளப்புகிறது என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் அண்ணாத்த படத்தின் வசூல் கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் உலகமெங்கும் திரையிடப்பட்டு வருகிறது.

படத்திற்கு ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பு போகப்போக சற்று மந்தமாக மாறியது. இதற்கு முழு காரணம் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். நாம் பல திரைப்படங்களில் பார்த்த வழக்கமான அண்ணன், தங்கை சென்டிமென்ட் வைத்து உருவாகி உள்ளது அண்ணாத்த திரைப்படம்.

மேலும் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா தன் முந்தைய படமான வேதாளம் திரைப்படத்தை போன்று இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார் என்ற ஒரு குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இவை அனைத்தும் படத்தின் வசூல் குறைந்ததற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அண்ணாத்த திரைப்படம் சென்னை உட்பட பல இடங்களிலும் பரவலான வசூலைப் பெற்று வருகிறது. ஆனால் திருச்சியில் மட்டும் வசூல் மிக குறைவாக உள்ளது. இப்படம் திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் கூட்டம் இல்லாமல் தியேட்டர் காற்று வாங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை மற்றும் டாக்டர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது. டாக்டர் திரைப்படம் வெளி வந்து பல நாட்கள் கடந்த பின்னும் படத்திற்கான வரவேற்பு இன்றும் சிறப்பாக இருந்து வருகிறது.

இதனால் டாக்டர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அதிகரித்துள்ளது. ஆனால் அண்ணாத்த திரைப்படம் டாக்டர் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் வசூலை தாண்டவில்லை என்பது சற்று வருத்தத்திற்குரிய செய்தியாகும். இந்த ரிப்போர்ட்டை வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஷாக் ஆக உள்ளது.