தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நிலைத்து நிற்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது கூட அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்து இப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் ரஜினி ரசிகர்கள் அனைவரும் படத்தை திரையில் காண காத்திருக்கின்றனர் .

சினிமாவில் பல நடிகர்கள் அறிமுகமானாலும் அதில் ஒரு சில நடிகர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. அதற்கு திறமை மட்டுமே காரணம் என்று கூற முடியாது திறமையைத் தாண்டி ரசிகர்களின் ஆதரவு மற்றும் சக நடிகர்களின் நட்பு மற்றும் பழகும் குணம் என அனைத்துமே முக்கியம் என பல நடிகர்கள் கூறியுள்ளனர்.

ரஜினிகாந்த் படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். அதற்கு காரணம் படத்தின் டைட்டில் முதல் கொண்டு இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அதிக உழைப்பை போடுவார்கள். அப்படி உருவான படங்கள் ரஜினியின் வாழ்க்கையில் அதிகம் என்று தான் கூற வேண்டும்.

ரஜினிகாந்த் லதா என்பவரை காதலித்து வந்தார். ஆனால் வீட்டில் ஒரு சில எதிர்ப்புகள் வந்தும் பின்பு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ரஜினிகாந்த் அப்போது பல படங்களில் நடித்து கொண்டிருந்தார். அதனால் தனது திருமணத்தை முடித்து 1 மணி நேரத்திலேயே மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படத்தை நடித்துக் கொடுத்துள்ளார்.

அதனை பார்த்த இயக்குனர்களும்,  தயாரிப்பாளர்களும் ரஜினி அவர்கள் சினிமா மேல் வைத்திருக்கும் அன்பை சமீபத்தில் வெளிப்படையாக கூறியுள்ளனர். மேலும் சினிமாவில் மேல் இவர் வைத்திருக்கும் ஆர்வத்தால் தான் தற்போது வரை படங்களில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்கள் தற்போது ரஜினி திறமையைத் தாண்டி உழைப்பை பாராட்டி வருகின்றனர்.