தாணு தயாரிப்பில் ஜி வி பிரகாஷ்- கெளதம் மேனன் நடிக்கும் புதிய படம்.. வைரலாகும் போஸ்டர்.!

கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் புதிய படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இயக்குனர் வெற்றிமாறனின் அஸோஸியேட் இயக்குனர் மதிமாறன் செலஃபீ படத்தின் வாயிலாக இயக்குனர் ஆகிறார்.

ஜி வி பிரகாஷ் இன்று இசை அமைக்கும் படங்களை விட ஹீரோவாக நடிக்கும் படங்கள் தான் அதிகம். அது போலவே கெளதம் மேனன் இயக்கும் படங்களை விட முக்கிய ரோல்களில் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. இந்த இருவரும் கூட்டணி போட்டு நடிக்கும் பட்சத்தில், படம் கட்டாயம் வேற லெவலில் தான் இருக்கும்.

ஜி வி பிரகாஷ் இசை அமைத்து நடிக்கும் இப்படத்தில் கவுதம் மேனன் முக்கிய ரோலில் நடிக்கிறார். வி கிரேஷன்ஸ் உடன் இணைந்து டி ஜி பிலிம் கம்பெனி இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இன்ஜினியரிங் கல்லூரி பின்னணயில் இப்படம் உருவாக்கி வருகிறது. வர்ஷா போல்லம்மா ஹீரோயினாக நடிக்கிறார். ஆக்ஷன் திரில்லர் ஜானர் படமாம் இது.

செலஃபீ – confessions of an engineer என்ற டேக் லயனுடன் இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.