தாஜ்மகாலுக்கு பறந்த சிவகார்த்திகேயன்.. எல்லாம் கட்டிபுடி வைத்தியம்தான் காரணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றனர். அதனால் தற்போது சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கவனம் செலுத்தி வந்தார் அதன் பிறகு சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயனுக்கு காமெடியை தவிர்த்து மற்ற எந்த ஒரு கதாபாத்திரம் சரியாக இருக்காது என பலதரப்பினரும் கூற அதனை மாற்றி அமைக்க வேண்டும் என ஒரு சில படங்களில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டார். அவர் சீரியஸ் ஆக நடித்த பல படங்கள் தோல்விதான்.

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் எமோஷனல் காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். ஆனால் மீண்டும் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்தார். ஆனால் அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை படம் மெகா தோல்வியை சந்தித்தது.

அதன்பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் யார் எது சொன்னாலும் தனக்கு எது பிளஸ் என்பதை புரிந்து என்டர்டைன்மென்ட் கலந்த கதைகளில் நடித்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் உடன் கூட்டணி அமைத்து டான் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.

தற்போது அன் படக்குழு காதல் காட்சியை எடுப்பதற்காக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து காதல் பாடல் காட்சிகளும் எடுக்க திட்டமிட்டுள்ளனர் எனவும் கூறி வருகின்றனர். அதிலும் படு ரொமான்ஸ் காட்சிகளாம். நீங்க நடத்துங்க சிவா.