தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை வருகிற பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதால் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

ஆனால் சமீபத்தில் விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனருடன் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நேற்று தளபதி66 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படிபல்லி இயக்குவதாகவும் தில் ராஜு தயாரிப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

மேலும் தெலுங்கில் வம்சி படிபல்லி பிரபல இயக்குனராக இருப்பதால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் வம்சி படிபல்லி ஒரு வித்தியாசமான கதை உருவாகியுள்ளதாகவும், இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இரண்டிலும் வெளியிட்டு வசூலை வாரி குவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் வம்சி படிபல்லி வெளிப்படையாக ஒரு சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது இப்படம் முழுக்க முழுக்க கதை வித்தியாசமாக உருவாகியுள்ளதாகவும் இப்படத்தில் மாஸ் ஹீரோ போன்ற காட்சிகள் எதுவும் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளனர். மேலும் வம்சி படிபல்லி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் படம் இருப்பதற்காகவே இந்த மாதிரியான மாஸ் காட்சிகள் எதுவும் எடுக்க திட்டமிடவில்லை என கூறியுள்ளனர்.

தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலுமே அவருக்காக அதிரடியான ஒரு சில காட்சிகள் இடம்பெற்று அந்த காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறும். ஆனால் இப்படத்தில் இந்த மாதிரியான மாஸ் காட்சிகள் எதுவும் எடுக்க திட்டமிடபடவில்லை என்பதால் ரசிகர்கள் யாரும் மாஸ் காட்சிகள் எதிர்பார்த்து வந்தால் ஏமாந்துதான் போவார்கள் என கூறியுள்ளனர். ஆனால் ரசிகர்களுக்கு பெரிதும் பிடிக்கும் படமாக இருக்கும் என கூறியுள்ளனர்.