தளபதி66 படத்திற்கு வில்லனாகும் அஜித் பட வில்லன்.. கோடம்பாக்கத்தை அதிர வைக்கும் புதிய காம்போ

தளபதி விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி 66 வது படமாக இருக்கக்கூடிய படத்தை இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த படத்தின் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. மற்றபடி இந்த படத்தில் அடுத்தடுத்த கதாபாத்திரங்களில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. அப்படி இருக்கையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது வில்லனாக நடிப்பதற்கு பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய இவர் தற்போது தளபதிக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. இவர் ஏற்கனவே அஜித்குமாரின் விவேகம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக தோன்றி இருப்பார். அந்த படத்தை போலவே தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

சமீப நாட்களில் ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரம் தான் தமிழ் சினிமாவில் அதிகமாக வரவேற்க்கதக்க கதாபாத்திரங்களாக இருக்கிறது. பேட்ட படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்தது, அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. அப்படி உச்சத்தில் இருக்கக்கூடிய பல நடிகர்கள் பகத் பாசில் உட்பட பலர், தற்போது வில்லன் கதாபாத்திரங்களை விரும்பி நடிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்தவரிசையில் தான் தற்போது விவேக் ஓபராயும் இணைந்து இருக்கிறார்.

பீஸ்ட்க்கு பிறகு தளபதி நடிக்கும் படம் இந்தப் படம் என்பதால் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது .ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பாலிவுட்டின் மிகச்சிறந்த முக்கிய நடிகர் தற்போது இந்த படத்தில் இணைந்திருப்பதால் ஒருவேளை ஹிந்தியிலும் இந்த படம் டப் செய்யப்பட்டு ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.