தளபதி 67 படத்தின் அசத்தலான அப்டேட்.. வெற்றிக் கூட்டணியில் விஜய்

இந்த சமயத்துல தளபதி விஜய்க்கு மட்டுமில்லாம விஜய் ரசிகர்கள் காட்டுலயும் அடைமழைன்னு தாங்க சொல்லனும். ஏன்னா விஜய்யோட அடுத்தடுத்த படங்கள் குறித்த அதிரடியான அப்டேட்டுகள் தொடர்ச்சியா வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து கொண்டிருக்கிறது. அப்படி என்ன அப்டேட்டுனு தான கேட்கறீங்க.

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ள தகவல் பல மாதங்களுக்கு முன்பே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆமாங்க விஜய் இப்போ அவரோட 65வது படமான பீஸ்ட் படத்தில நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.

இதனையடுத்து விஜய்யின் 66 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளதும், தில் ராஜு படத்தை தயாரிக்க உளள்தும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இதுதவிர தளபதி 66 படம் குறித்து தினமும் ஏதாவது ஒரு தகவல் வந்த வண்ணம் உள்ளது. இப்போ விஷயம் என்னன்னா தளபதி 67 படத்தை நம்ம இயக்குனர் வெற்றிமாறன் தான் இயக்க போறாராம்.

வெற்றி மாறன் இப்போ காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்த பின்னர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை எடுக்க உள்ளாராம். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் தளபதி 67 படத்தை இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் விஜய்யும் பீஸ்ட் மற்றும் தளபதி 66 ஆகிய படங்களை முடித்து விடுவார். முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இதுல மகிழ்ச்சி என்னனா விஜயோட 65வது படமே இன்னும் வெளாயாகல. ஆனால் அதுக்குள்ள தளபதி 66, 67 என விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாவதால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஒருபக்கம் விஜய் ரசிகர்கள் அப்டேட் மழையில நனைந்து கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம் அஜித் ரசிகர்கள் பல வருஷமா ஒரே ஒரு படத்துக்கு மட்டும் அப்டேட் கேட்டுக்கிட்டு அந்த படம் எப்போ வெளியாகும்னு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அவங்கள நினைச்சாத்ன் கஷ்டமா இருக்கு.