தளபதி 67 இயக்குனர் வெற்றிமாறன் இல்லை.. மீண்டும் இளம் இயக்குனரை லாக் செய்த விஜய்

நம்ம தளபதி விஜய் தான் இப்போ கோலிவுட்ல டிரெண்டிங்ல இருக்காரு. காரணம் அடுத்தடுத்து இவர் படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியாவது தாங்க. இப்போ என்ன நியூஸ்னு தான கேட்கறீங்க. தளபதி 67 படம் தாங்க இன்னைக்கு டிரெண்டு. முன்னதாக தளபதி 67 படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதா தகவல் வந்துச்சு. ஆனா இப்போ அதுல ஒரு டிவிஸ்ட் வச்சிட்டாங்க.

அதாவது தளபதி 67 படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க போறாராம். இவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே மாஸ்டர் என்ற ஒரு பிளாக் பஸ்டர் படத்தில் இணைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த வெற்றி கூட்டணி இணைய உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நம்ம தளபதி இப்போ நெல்சன் இயக்கத்தில பீஸ்ட் படத்தில நடிச்சிக்கிட்டு இருக்காரு. கிட்டத்தட்ட இந்த படத்தோட படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. மேலும் பீஸ்ட் படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனை தொடர்ந்து விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாக உள்ள அவரது 66வது படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள தளபதி 66 படத்தை முடித்த பின்னரே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ள புதிய படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எப்படியோ விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்துக்கிட்டு இருக்குனு மட்டும் தெரியுது.

விவாகரத்து உறுதியானவுடன் முதல் வேலையா பெயரை மாற்றிய சமந்தா.. அதுக்குன்னு இவ்வளவு ஸ்பீட் ஆகாது

நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அக்கினேனி குடும்பத்தின் மருமகளான பின்னும் இவர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். ...