தளபதி 66 படத்திற்காக மாஸ் என்ட்ரி கொடுக்கும் மகேஷ் பாபு.. எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தளபதி விஜய் தற்போது இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தின் அறிவிப்பு வெளியானது. அதன்படி நடிகர் விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். விஜய் நடிப்பதால் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் எடுக்க உள்ளனர்.

தமன் இசையமைக்க உள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை படம் குறித்த அப்டேட்டுகள் வெளயாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது. முன்னதாக இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நானி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் படத்தின் பூஜை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஆயுத பூஜையான அக்டோபர் 14ஆம் தேதி ஹைதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தளபதி 66 படத்தின் பூஜையை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இதுதவிர இப்படத்தின் பூஜையில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பங்கேற்க உள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. தற்போது உருவாக உள்ள தளபதி 66 படத்தின் கதையில் முதலில் நடிக்க இருந்தவர் மகேஷ் பாபு தான். ஆனால் மகேஷ் பாபு இந்த கதை என்னை விட விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என கூறியதை அடுத்து தற்போது விஜய் இப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும் தளபதி 66 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகளால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.