தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? கடைசிப் படத்தில் விட்ட வாய்ப்பை தட்டி பறித்த பிரபலம்.!

தற்போது கோலிவுட் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே டாப்பிக் என்றால் அது தளபதி 66 படம் மட்டுமே. ஏனென்றால் விஜய் முதல் முறையாக பிற மொழி படத்தில் நடிக்க உள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியும், வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நானியும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படத்தின் பூஜை அடுத்த மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு 14ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் குறித்த மற்றும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி, தளபதி 66 படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போது தமன் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, நடிகர் விஜய்யின் 65வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாக இருந்த சமயத்தில் அப்படத்திற்கு இசையமைக்க தமன் தான் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் சில பிரச்சனை காரணமாக ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்தில் இருந்து விலகியதால், தமனுக்கும் விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. தற்போது தளபதி 66 படத்தில் அந்த வாய்ப்பை தமன் பெற்றுள்ளார்.