தளபதி 66 அப்டேட் கொடுத்த இயக்குனர் வம்சி.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்

ரசிகர்களால் செல்லமாக தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படம் விஜய்யின் 65வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து விஜய்யின் 66 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இயக்குனர் வம்சி அதனை உறுதிப்படுத்தி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வம்சியிடம் உங்களின் அடுத்த ப்ராஜெக்ட் என்ன என கேட்கிறார். இதற்கு பதிலளித்த வம்சி, “நிச்சயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தளபதி 66. விரைவில் அறிவுப்பகள் வெளியாகும்” என கூறியுள்ளார்.

இதனால் நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதியாகயுள்ளது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள இப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் வரும் அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு தளபதி 66 படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும், பிரம்மாண்டமாக நடக்க உள்ள அந்த விழாவில் தெலுங்கு சினிமாவின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பீஸ்ட் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், தளபதி 66 படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் 2022 ஆம் ஆண்டு தளபதி பொங்கல் மற்றும் தளபதி தீபாவளியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தளபதி 66 வம்சி