தளபதி விஜய் குறித்து மோசமாக விமர்சனம் செய்த தயாரிப்பாளர்.. கோலிவுட்டில் பரபரப்பு.!

தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சம் இருப்பதே இல்லை. அந்த வகையில் சர்ச்சைகளுக்கு மிகவும் பெயர் போனவர் தான் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன். தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்துள்ள இவர் பல நடிகர்களையும் மோசமாக விமர்சனம் செய்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார்.

அந்த வகையில் இவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. பொது மேடையில் வைத்து பாடகி சின்மயிக்கு மிரட்டல் விடுத்தது. நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் தனுஷ் என பலரை விமர்சனம் செய்தது, நடிகை த்ரிஷா திமிர் பிடித்தவர் என்றும், நடிப்பதற்கு கற்றுக்கொள்ளவில்லை ஆனால் சம்பளத்தை மட்டும் உயர்த்திக் கொண்டே போகிறார் எனவும் கூறியது உட்பட பல புகார்கள் உள்ளன.

பல முன்னணி நடிகர்களை வம்பிழுத்த தயாரிப்பாளர் கே.ராஜன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய்யை சீண்டியுள்ளார். பட நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால் சென்சார் பிரச்சனை வருவது இயல்பான ஒன்றுதான்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான சிறிய விமர்சனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு சுமார் 12 மணி நேரம் மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். அப்போது விஜய்யை என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. அந்த படத்திற்கு பிறகு மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதே இல்லை, விஜய் பயந்து போய் விட்டார்.

ஏனென்றால் விஜய் பணக்காரர் பணம் அதிகம் சேர்த்துள்ளவர்களுக்கு ஆண்மையும், கொடுமையை எதிர்க்கும் தன்மையும் போய் விடுகிறது. எங்களைப் போன்ற ஏழைகள் தான் எதிர்த்து நிற்போம் என கூறி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். கே.ராஜனின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.