தளபதி விஜய்யை தரக்குறைவாக பேசிய நடிகர்.. பதிலடி கொடுத்த மெர்சல் பட வில்லன்!

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக விளங்குபவர் தளபதி விஜய். இவருடைய படங்கள் திரையரங்கில் வெளியாகிறது என்றால், தியேட்டர்கள் முழுவதும் விழாக்கோலம் போல் காட்சியளிக்கும். அந்தளவிற்கு ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும்பாலான ரசிகர் கூட்டம் உண்டு.

இத்தகைய பெருமைக்குரிய நடிகர் விஜயை மலையாள பிரபல நடிகர் ஒருவர் தரக்குறைவாக விமர்சித்திருப்பது தளபதி விஜயின் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் சமீபத்தில் மலையாள தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றின் மூலம் பிரபல சீரியல் நடிகரான சித்திக், ‘மோலிவுட்டில் நிறையவே அதிர்ஷ்டம் செய்துள்ளது.

ஏனென்றால் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் இங்குதான் உள்ளனர். மற்ற திரை உலகில் இந்த அளவிற்கு இல்லை. அதிலும் குறிப்பாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார், பெரிய நடிகர், இளையதளபதி என சொல்லப்படும் நடிகர் விஜய் உண்மையாவே சிறந்த நடிகர் இல்லை. அவரை பெருமைப்படுத்துவதற்காக சொல்லப்படும் சூப்பர்ஸ்டார் என்ற பட்டமே அவரை தூக்கி நிறுத்துகிறது.

வேணுமானால் உலகநாயகன் கமலஹாசன் சிறந்த நடிகர் மற்றும் சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாமே தவிர ஏனைய நடிகர்களை அதுவும் விஜய்யை சிறந்த நடிகர் என சொல்வதற்கு வாய்ப்பே இல்லை’ என்று சித்திக் விமர்சித்துள்ளார். இவருடைய இந்தப் பேட்டிக்கு பிறகு, மற்றொரு மலையாள நடிகரான ஹரிஷ் பெராடி, தளபதி விஜய்க்கு ஆதரவாக பேசி உள்ளார்.

இளைய தலைமுறைகளின் முன்மாதிரியான நடிகராக விளங்கும் விஜய், சூப்பர் ஸ்டார்தான். அவர் சிறந்த நடிகர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று ஹரிஷ் பேரடி கூறியிருப்பது தளபதி ரசிகர்களை சாந்தப்படுத்தி உள்ளது. இவ்வாறு மலையாள சினிமா உலகில் தளபதி விஜயை பற்றி பல்வேறு விதமான கருத்துக்களை விமர்சித்து சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவம் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

மலையாள நடிகர் ஹரிஷ் பேரடி, வைபவ் நடிப்பில்வெளிவந்த டாணா படத்தில் போலீஸ் அதிகாரியாக நெகட்டிவ் ரோலில் நடித்தும், அதைப்போல் தளபதி விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கிலும் சாதனை படைத்த பாலச்சந்தர்.. 2 வருடம் ஓடி வெற்றி கண்ட திரைப்படம்

தமிழ் திரையுலகில் பல எதார்த்தமான படைப்புகளையும் துணிச்சலான கதாபாத்திரங்களையும் நமக்கு கொடுத்தவர் இயக்குனர் பாலச்சந்தர். இவர் இயக்கிய அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை போன்ற பல திரைப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. ...