தளபதி விஜய்யின் ஜாதி சான்றிதழை தொடர்ந்து.. நயன்தாராவை விமர்சித்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவிற்கு டூரிங் டாக்கீஸ், சாகசம் போன்ற படங்களின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர்தான் நடிகர் அபி சரவணன் என்கின்ற விஜய் விஷால். இவர் தற்போது சாயம் படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தை அந்தோணிசாமி இயக்க படத்தில் போஸ் வெங்கட், பொன்வண்ணன், இளவரசு, சீதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மீது சாதி சாயம் பூசுவது அவர்களது வாழ்க்கையை மாற்றி விடுகிறது என்பதை மையமாக இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இந்தப்படத்தின் இசை. வெளியீட்டு விழாவில் விஜய்யின் ஜாதி சான்றிதழ் குறித்து எஸ் ஏ சி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மேடையில் பேசிய விஜய் விஷால்; ‘நடிகைகள் எந்த உயரத்திற்கு சென்றாலும் ஏன் நயன்தாரா மேடமாக இருந்தாலும், பொதுமேடையில் கால் மேல் கால் போட்டு உட்காராமல் இருப்பது நல்லது.

ஒரு வேளை நீங்கள் அணிந்திருக்கும் உடை உங்களுக்கு கம்பர்டபளாக இல்லை என்றால் அதற்கேற்றார் போல் உடை அணியுங்கள். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

ஏனென்றால் நீங்கள் அமர்ந்திருக்கும் மேடையில் பல ஜாம்பவான்கள் அமர்ந்திருப்பதால் அவர்களுக்கு மரியாதை குறைவாக இருப்பதாக நான் எண்ணுகிறேன்’ என்று விஜய் விஷால் மேடையில் விமர்சித்தது தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

இவர் இப்படிப் பேசும் பொழுதே மேடையில் அமர்ந்திருந்த கதாநாயகி கால் மேல் கால் போட்டு இருப்பதை தவிர்த்து சாதாரணமாக உட்கார்ந்தது பலருடைய கவனத்தை பெற்றது.

பாரதியுடன் சேர்ந்து வாழ நினைக்கும் கண்ணம்மா.. வெண்பாவை விட விஷமாக மாறிய தாய்

பாரதி கண்ணம்மாவில் வெண்பாவை வெறுப்பேற்றிய சந்தோஷத்துடன் வீட்டிற்கு வருகிறார் கண்ணம்மா. அப்போது தன் இரு குழந்தைகளுடன் கண்ணம்மா சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை பிரிண்ட் போட்டு கடைக்காரர் எடுத்து வருகிறார். போட்டோவை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் ...