தளபதி விஜய்க்கு வைத்திருந்த பார்ட் 2-வில் நடிக்கும் ராம் சரண்.. கதை லீக்கானதால் டென்ஷனில் ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பூஜை மிக பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஷங்கர், ராம்சரண், ராஜமௌலி, கீரா அத்வானி, ரன்வீர் சிங் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தற்போது மெகா ஸ்டார் ராம்சரண் நடிக்கும் இந்தப் படத்தின் கதை லீக் ஆகியுள்ளது. 1999 ஆம் ஆண்டு வெளிவந்த முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் போல் அமைந்துள்ளதாம் இந்த படத்தின் கதை. அர்ஜூன், மனிஷா கொய்ராலா, ரகுவரன் நடிப்பில் பிரமாண்ட வெற்றி பெற்ற படம் முதல்வன்.

இந்த படத்தில் முதலமைச்சருக்கும் ஒரு சாமானிய மனிதனுக்கும் நடக்கும் போராட்டத்தை மிக தத்ரூபமாக வெளிக் கொண்டு வந்து இருப்பார். அர்ஜுன் ஒரு மீடியாவில் வேலை பார்த்துக்கொண்டு பல ஊழல்களை வெளிக் கொண்டு வருவார்.

இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை முதல்வர் பதவி வரை கொண்டுபோய் நிறுத்திவிடும். தற்போது ராம்சரணுடன் இணைந்த ஷங்கர் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் போல் கதை அமைத்து உள்ளாராம்.

அதாவது முதலமைச்சருக்கும், ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும் நடக்கும் யுத்தம் தான் இந்த படத்தின் கதையாம். கிட்டத்தட்ட முதல்வன் போலவே கதையம்சம் அமைந்து உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி முதல்வரை எதிர்த்து தனிக்கட்சி அமைத்து எப்படி பதவியில் அமர்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதையாம்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வாழ்க்கை நடந்த உண்மை சம்பவம் போலவே இந்த கதை அம்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டதட்ட முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் என்றே கூறலாம். தற்போது கதை லீக்கானதால் ஷங்கர் பெரும் டென்ஷனில் இருக்கிறாராம். பல கோடி பட்ஜெட்டில் எடுக்க உள்ள இந்தப் படத்தின் கதை தெரியவந்தாலும் ஷங்கர் பிரம்மாண்டத்திற்கு ஈடாகாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

எம்ஜிஆர் முதல் வடிவேலு வரை நடித்த பிரபல நடிகை.. தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் பரிதாபம்

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு குணச்சித்திர நடிகர்களும் முக்கியம். அப்படி பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் ரங்கம்மா பாட்டி. இவர் ...