பிரபல தெலுகு நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வந்துள்ளார். அவர் பகிர்ந்த விஷயங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவர் கர்நாடகத்தை பூர்விகமாகக் கொண்டவர். டிகிரி முடித்துள்ளார் பின்பு சைக்காலஜி இங்கிலீஷ் லிட்ரேச்சர் மற்றும் ஜர்னலிசம் முடித்துள்ளார்.

எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட மாட்டாராம் ராஷ்மிகா. அது போல தான் அவர் காலேஜ் படிக்கும்போது வந்த மாடலிங் வாய்ப்பை பயன்படுத்தி மாடலிங் செய்துள்ளார். அதை தொடர்ந்து கர்நாடக வெளியான க்ரீக் பார்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார், படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதற்கு அடுத்து வெளிவந்த 3 திரைப்படங்களும் வெற்றியை பெற்றுத் தந்தது. முதல் படத்திலேயே சைமா விருது கிடைத்தது. கர்நாடக மேகஸின் இவரை பற்றி செய்தி வெளியானது இதை பார்த்த தெலுங்கு இயக்குனர் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் செய்தார்.

விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கிலும் இவர் நடித்த 3 படங்களுமே வெற்றி பெற்றது. தமிழில் கார்த்திக்குடன் சுல்தான் படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியை பார்த்து யதார்த்தமாக நடிக்க கற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனாவிற்கு 2017-ல் கர்நாடக நடிகருடன் நிச்சயதார்த்தம் நடந்தது பின்பு 2018 ஆம் ஆண்டு பிரேக்கப் செய்தார். இது அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறினார்.

தளபதி விஜய் என்றாள்  மிகவும் பிடிக்குமாம், அவர் தந்தையுடன் சேர்ந்து கில்லி படத்தை பார்த்த நாள் முதல் அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசையாம். தளபதி 64 திரைப்படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது பின்பு இத்திரைப்படத்தில் மாளவிகா மோகன் நடித்தார்.